1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (09:30 IST)

பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்; வாட்ஸப் மூலம் பிரசவம்! – காஷ்மீரில் ஆச்சர்யம்!

whatsapp
காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு வாட்ஸப் வீடியோ கால் வழியாக பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பலரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ள நிலையில் பல இயலாத காரியங்களும் கூட ஸ்மார்ட்போன்களால் நடந்து வருகிறது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தூர கிராமமான கெரன் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரசவம் ஆவதில் உடல்நல பிரச்சினைகளும் இருந்ததால் கிரால்போரா மாவட்ட துணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.


ஆனால் கடும் பனிப்பொழிவால் தரை வழி மற்றும் ஹெலிகாப்டர் என எதிலும் அவரை அழைத்து போக முடியாத சூழல் நிலவியுள்ளது. இதுகுறித்து மாவட்ட துணை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாட்ஸப் வீடியோ கால் வழியாக மகப்பெறு மருத்துவர் பர்வைஸ், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி செயல்பட்டு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். அவசரகாலத்தில் வீடியோ கால் மூலமாக நடைபெற்ற இந்த பிரசவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K