1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops may appinted as dmk deputy general secretary

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா ஓபிஎஸ்?!.. பரபர அப்டேட்..

ops
அதிமுகவில் பலமுறை எம்எல்ஏ, மூன்று முறை முதலமைச்சர், துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பல முக்கிய  பதவிகளை வகித்து வந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகலிருந்து வெளியேற்றப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பின் அதிமுகவில் மீண்டும் இணைய அவர் எடுத்த முயற்சிகள் நடக்கவில்லை. ஏனெனில், அவரை கட்சிக்குள்ளே விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம்..

அதிமுகவில் மீண்டும் தான் இணைய முடியாது என்பதை தெரிந்தகொண்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் இணைய முடிவெடுத்தார். அதன்படி இன்று காலை அறிவாலயம் வந்த அவர் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவரோடு அவரின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் இருந்தனர். அவர்களும் திமுகவில் இணைந்தனர். அதன்பின் செய்தியாளரிடம் பேசியவோ பன்னீர்செல்வம் ‘தளபதி ஸ்டாலின் தமிழகத்தை சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.. கடந்த ஐந்து வருடங்களில் திமுக நிறைய சாதனைகளை செய்திருக்கிறது.. திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் அதிமுகவின் முக்கிய பதவிகளில் இருந்த ஓ பன்னீர்செல்வத்துக்கு திமுகவில் என்ன பதவி கொடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.. அனேகமாக அவருக்கு திமுக துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்கிற செய்தியும் வெளியே கசிந்திருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
தவெகவில் செங்கோட்டையன்.. திமுகவில் ஓபிஎஸ்!.. தேர்தல் ஆதாயத்தால் காற்றில் பறக்கும் கொள்கைகள்!..