ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (22:50 IST)

காஷ்மீர் செல்லும் ''லியோ'' பட பிரபலம்....அவரே பகிர்ந்த அப்டேட்!

leo -vijay's 67th film
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்குப் பின் உருவாகி வரும் படம் லியோ.

விஜய்யின் 67 வது படமான லியோவின் திரிஷா, கெளதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் படித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஆங்கிலப் பாடலை சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் வசன கர்த்தா ரத்னகுமார் அளித்துள்ள பேட்டியில், ‘’உங்கள் எதிர்பார்பை பெரியாத வைத்துக் கொள்ளுங்கள். லியோ அதை விட பெரியதாக இருக்கும்.
பான் இந்தியா படமாக இருக்க வேண்டுமென்பதற்குத்தான் லியோ என்று பெயரிட்டுள்ளனர். காஷ்மீருக்கு இன்னும் சில தினங்களில் நான் செல்லவுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.