வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (20:02 IST)

பிரபல நடிகரை பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

நடிகர் கவினை லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர்  இவர் நடிப்பில் லிப்ட்  படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

அதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில், டாடா என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், லியோ பட இயக்குனர் லோகேஷ் கனராஜ் படக்குழுவினருடன் காஷ்மீரில் ஷூட்டிங்கில் உள்ள நிலையில், தற்போது ‘’தன் டிவிட்டர் பக்கத்தில், . டாடா படத்தின் நேர்மறை விமர்சனங்கள் பெறு வருவதற்கு   கவினுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.