1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Will farmers protest come to an end

விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா?

விவசாயிகள் போராட்டம்
போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர் இன்று பிற்பகலில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர் இன்று பிற்பகலில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். விவசாயிகளின் 6 அம்ச கோரிக்கைகளில் 5க்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 
 
ஆனால் லக்கிம்பூர் எல்லையில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்து பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. எனவே வசாய சங்கத்தினர், பிற்பகலில் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கவுள்ளன என தெரிய வந்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash