புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 4 டிசம்பர் 2021 (15:33 IST)

தமிழ்நாட்டில் ’ஒமிக்ரான் ‘ எச்சரிக்கை !

தமிழ்
நாட்டில் ஒமிக்ரான் தொற்று குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில் இருந்து தொற்றுடன் தமிழகம் வந்த  3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என அமைச்சர் ம,சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில்  2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது:  வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் தமிழகம் வந்துள்ள 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை; இங்கிலாந்தில் இருந்து வந்த இளைஞருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் ஒமிக்ரான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில்,சென்னை , திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.