வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (15:07 IST)

வேலூர், திருவள்ளூர், சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு... மத்திய அரசு குட்டு!

தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 711 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 711 பேர்களில் 128 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் வேலூர், திருவள்ளூர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க அந்த கடிதத்தில் அறியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 3வது வாரத்தை விட கடைசி வாரத்தில் இந்த குறிப்பிடப்பட்ட மூன்று மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளதால் மத்திய அரசு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.