1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (21:51 IST)

மனைவியின் ஆசை... ரூ.7 கோடியில் கோயில் கட்டிய கணவர்!

rajashthan
ராஜஸ்தான் மாநிலத்தின் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டியுள்ளார் ஒரு நபர்.

ராஜஸ்தான் மா நிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஜெய்பூரில் நகரைச் சேர்ந்தவர் கேத்ரபாஷி லெங்கா. இவர் மனைவி பைஜந்தி லெங்கா. இவருக்கு சிறு வயதில் இருந்தே சந்தோஷியின் பக்தையாக இருந்து வந்ததால், அவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தார்.

இந்த நிலையில், சந்தோஷி பெண் தெய்வத்தின் மீது கொண்ட பக்தியினால் மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய  கேத்ரபாஷி கோயில் ஒன்றைக் கட்ட முடிவு செய்தார்.

அதன்படி, தன் மீதுள்ள அன்பினாலும், கடவுள் பக்தியினாலும், மனைவியின் கிராமமான மனிதாப்பூரில் 15 ஆண்டுகளாக இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்  கேத்ரபாஷ.

இந்தக் கோயில் கட்டுமானத்திற்கு 30 கலைஞர்களை  தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்தக் கோயில், 64 அடி  உயரமும், உள்ளே அறை ஒன்று 84 அடி நீளமும் அமைந்துள்ளது.
கேத்ரபாஷி தன் மனைவின் மீதுள்ள அன்பினால், ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலைக் கட்டியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.