வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (11:40 IST)

ஆசியாவின் மிகப்பெரிய சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.2-க்கு கொள்முதல்; விவசாயிகள் போராட்டம்

onion
ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை என்ற பெயர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் உள்ள மார்க்கெட் என்று கருதப்படுகிறது. இந்த சந்தையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை மிகவும் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் கூறினார். இந்த நிலையில் நேற்று வெறும் 2 ரூபாய்க்கு வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன் விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் வெங்காயம் பொதுமக்களுக்கு 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தார். இதனை அடுத்து காய்கறி சந்தையில் முன்பே திடீரென விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தினார்
 
இது குறித்து வெங்காய உற்பத்தி தலைவர் கூறிய போது தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்ட தொடரில் ஒரு குவிண்டால் வெங்காயத்தை 1500 ரூபாய்க்கு விவசாயிகளில் இருந்து வாங்க வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விவசாயிகளுக்கு தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்
 
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாசிக் மார்க்கெட்டில் ஏலம் நடக்காது என்றும் விவசாயிகள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran