1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (09:29 IST)

பாலோ ஆன் –கு பிறகு விஸ்வரூபம் எடுத்த நியுசிலாந்து.. 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி

நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி டி 20 போட்டிகளுக்கு இணையான பரபரப்போடு நடந்து முடிந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 435 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர். பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 209 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது பாலோ ஆன் ஆனது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸை உடனடியாக தொடங்கிய நியுசிலாந்து அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த அணியின் லாதம், கான்வாய் மற்றும் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 483 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 257 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 258 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய இங்கிலாந்து அணி 256 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நியுசிலாந்து அணியின் நீல் வேக்னர் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை சாய்த்தார்.