திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (11:30 IST)

ரூ. 20 கோடி அம்பேல்... கை நழுவிப்போன வாய்ப்பு - தொடர் தோல்வியில் நயன்தாரா!

நயன்தாராவுக்கு இது கெட்ட நேரம் என ஒட்டுமொத்த திரையுலகமே ஒன்றுகூடி கும்பல் கும்பலாக பேசி வருகிறார்களாம். எந்த நேரத்தில் விக்கி கையை பிடிச்சாரோ அன்னைக்கு பிடித்தது சனி. 
 
ஆம், கனெக்ட் படம் தோல்வியால் நயன்தாரா மார்க்கெட் சர்ர்னு இறங்கியது. பின்னர் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதற்கு வக்காலத்து வாங்கிய நயன் அசிங்கப்பட்டது தான் மிச்சம். 
 
இப்படி தொடர் சிக்கலுடன் கூடுதல் பிரச்சனை ஒன்று வந்துள்ளது. என்னவென்றால் முன்னணி தயாரிப்பாளரின் வெற்றி படத்தில் நடித்த நயன்தாரா அவரது தயாரிப்பிலே அடுத்தடுத்த இரண்டு படங்களில் கமிட் செய்யப்பட்டாராம். 
 
இதற்காக ரூ. 20 சம்பளம் பேசப்பட்டு முன் பணம் கூட வாங்கிய நயன்தாரா புருஷன் பிரச்சனையில் தலையிட்டு இதற்கு கால்சீட் கொடுக்காமல் தாமதித்து வந்துள்ளார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.