வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:12 IST)

மனைவியுடன் கள்ளஉறவு வைத்திருப்பரை பழிவாங்கிய நபர்

பீகார் மாநிலத்தில் தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரின் மனைவியை நீரஜ் என்ற நபர் திருமணம் செய்து அவரைப் பழிவாங்கியுள்ளார்.

பீகார் மாநிலம் மகாரியா மாவட்டத்தில் உள்ள ஹர்த்தியா கிராமத்தில் வசித்து வருபவர் நீரஜ். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளது.

இவருக்கு சில நாட்களுக்கு முன் ரூபிக்கு பஸ்ராஹா பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதை நீரஜ் கண்டுபிடித்தார்.

ரூபி - முகேஷுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாவே தொடர்பு இருந்த நிலையில், இவர்கள் திருமணம் திருமணம் செய்துகொண்டு வேறிடத்திற்குச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், முகேஷின் மனைவியுடன் நீரஜ் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தியுள்ளார்.

நீரஜ் தற்போது திருமணம் செய்துள்ள பெண்ணின் பெயரும் ரூபி என்பது குறிப்பிடத்தக்கது, இந்த சம்பவம் அங்குப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.