வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:32 IST)

விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் திடீர் உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது ஆட்டம் பாட்டத்துடன் இருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததை அடுத்து அவரது கர்ப்பிணி  மனைவிகதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மாவரம் என்ற பகுதியில் விநாயகர்  சதுர்த்தி தினத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 24 வயது இளைஞர் ஒருவர் நடனம் ஆடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். 
 
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அந்த இளைஞருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனதாகவும் அவருடைய மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவரின் மறைவு கேட்டு அவரது மனைவி கதறியழும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran