வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:27 IST)

இளம் வயது மரணங்கள் கொடுமையானது... விஜய் ஆண்டனி மகள் மரணம் குறித்து தயாரிப்பாளர்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று இரவு திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில்  தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: 
 
இளம் வயது மரணங்கள் கொடுமையானது. பொத்திப் பொத்தி வளர்க்கும் குழந்தைகள் எடுக்கும் தடுமாற்றமான முடிவில் ஏற்படும் மனத் துயரம் சொல்லில் அடங்காது. தன் மகளை இழந்து தவிக்கும் இசையமைப்பாளர்  விஜய் ஆண்டனி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்லவென்றே தெரியவில்லை. வெளிவரமுடியாத துயரம். இறைவன் மடியில் இளைப்பாறட்டும் அம்மகள். 
 
Edited by Mahendran