1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today sensex and nifty hiked

மும்பை பங்குச்சந்தை முதல் நாளிலேயே உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

sensex
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் மற்றும் பணவீக்கம் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய முதலீடுகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே 700 புள்ளிகளுக்கும் அதிகமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. சற்று முன் வரை 730 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 450 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை 215 புள்ளிகள் 15 ஆயிரத்து 915 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
17 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் இன்றைய நிலவரம்!