செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sva
Last Updated : வியாழன், 23 ஜூன் 2022 (11:04 IST)

நேற்று சரிவு, இன்று உயர்வு: பரமபத ஆட்டத்தில் பங்குச்சந்தை!

Share
மும்பை பங்குச் சந்தையில் நேற்று முன்தினம் உயர்ந்து, நேற்று சரிந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து காணப்படுவது சந்தையில் பரமபத ஆட்டம் தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இன்று பங்கு சந்தை உயர்ந்து காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 650 புள்ளிகள் வரை உயர்ந்து 52480 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 200 புள்ளிகள் உயர்ந்து 15602 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது