தொடர்புடைய செய்திகள்
- முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!
- அரசியலமைப்பு புத்தகத்தை தொட்டுப் பாருங்கள்.? பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!!
- 70 தான் என்று சொன்ன எதிர்க்கட்சிகள்.. 270 என்று கூறும் அமித்ஷா.. எது உண்மை?
- 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்..! மும்பையில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ..!!
ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!
5ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் ஏற்கனவே 4 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் 49 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி 5ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்
49 தொகுதிகளில் ராகுல் காந்தி உள்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதேபோல்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் களத்தில் இருக்கிறார். மேலும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
மேற்கண்ட விஐபி தொகுதிகள் உட்பட 49 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது என்பதும் வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த தொகுதிகள் அனைத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முக்கிய தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக ஐந்தாம் கட்ட தேர்தல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
