1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (16:12 IST)

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

Manzoor Ali Khan
மனிதன் உணர்ந்து கொள்வதற்கு இது உண்மையான ஜனநாயக தேர்தல் அல்ல, அதையும் தாண்டி, கொடூரமானது என நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
 
இவர்களை எதிர்த்து மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு மக்களவை தேர்தலை விமர்சனம் செய்துள்ளார்.

மலைப்பிரதேசத்தில் மன்சூர் அலிகான் நிற்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவுடன் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் என்ற பாடலில் வரும், ‛‛உண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போகும் என்ற வரிகைள பின்னணி இசையாக சேர்த்துள்ளார்.

 
மேலும் அந்த பதிவில், மனிதன் உணர்ந்து கொள்வதற்கு இது உண்மையான ஜனநாயக தேர்தல் அல்ல,அதையும் தாண்டி., கொடூரமானது என மன்சூர் அலிகான் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தான் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.