1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

15 ஆயிரமாக உயர்ந்த பாதிப்புகள்; 47 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!

India Corona Cases
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,754 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்தது. புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,85,535 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,01,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 2,09,27,32,604 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,52,882  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
காதலியுடன் சண்டை; ஹேண்ட் பேக்கில் “சூச்சூ” போன காதலன்!