தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- இந்தியாவில் கொரோனா 4வது அலை: ஜூன் மாதம் வரும் என தகவல்
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- தொடர்ந்து 3 ஆயிரத்தில் நீடித்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- தொடர்ந்து 3 ஆயிரத்தில் நீடிக்கும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
மீண்டும் 3 ஆயிரத்திற்கு கீழ் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,288 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,07,689 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,63,949 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 19,637 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
