தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் 3 ஆயிரத்திற்கு கீழ் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- வீடெங்கும், வீதியெங்கும் தேசியக் கொடி! – ரூ.500 கோடிக்கு விற்பனை!
- கேரள அரசின் ஆன்லைன் டாக்சி சேவை செயலி! – இன்று முதல் தொடக்கம்!
- இனி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ரூ.21 சேவை கட்டணம்! – இன்று முதல் அமல்!
- திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்: இன்று முதல் விற்பனை!
மீண்டும் 12 ஆயிரமாக உயர்ந்த பாதிப்புகள்; 72 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,42,98,864 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,27,206 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,36,70,315 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,01,343 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
