1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. karnataka cm tk sivakumar wont meet cm vijay

விஜயை சந்திக்க தயங்கும் கர்நாடக முதல்வர்!.. எம்.ஜி.ஆர் பாணி அரசியல் எடுபடுமா?..

karnataka vijay
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு தர முடியாது என மறுப்பதும், தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி அதை பெறுவதும் வழக்கமான ஒன்றுதன். இந்த வருடமும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடகா கைவிரித்துவிட்டது. மேலும், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறியிருக்கிறது.

ஆனால் திமுகவை போல சட்டப்போராட்டம் நடத்த விரும்பாத விஜய் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்..

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திப்பது என்பது எம்ஜிஆர் காலத்து பாணி. ஒருமுறை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது எந்த முன்னறிவிப்பும் இன்றி கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரின் வீட்டில்  எம்.ஜி.ஆர் அமர்ந்து விட்டார். அவர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தபோது ‘தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் நான் உங்கள் வீட்டில் தண்ணீர் குடிக்கமாட்டேன்’ என சொல்ல உடனே தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீரை வழங்கியது..

அதுபோல விஜய் கர்நாடகாவுக்கு சென்றாலும் கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் விஜயை சந்திக்க தயங்குகிறார் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒருவேளை தமிழக முதல்வரை சந்தித்தால் அதை வைத்து கர்நாடகாவில் பாஜக அரசியல் செய்யும் என யோசிக்கிறாராம்.
ஆனாலும் எம்ஜிஆர் பாணியில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரை சந்தித்தார் என்கிற செய்திக்காக இந்த சந்திப்பை நடத்திவிட வேண்டுமென தவெக விரும்புவதாக தெரிகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக்க வேண்டும்: வாங்க்சு மனைவி கோரிக்கை.. திமுக ஏற்குமா?