திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (07:57 IST)

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்: இனி 5000 பேர்களுக்கு மட்டுமே கிடைக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 தரிசன கட்டணத்திற்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு காரணமாகவும் ஆந்திராவில் பகல் நேர ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது 
 
குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு பக்தர்கள் ஒருவர் கூட வரவில்லை. இதனை அடுத்து தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் என அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது 
 
எனவே ஜூன் 1 முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன கட்டணத்தை தினமும் 5 ஆயிரம் பேர்கள் மட்டுமே திருப்பதி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.