1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (22:08 IST)

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. வாட்ஸ்அப்பை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!...

whatsapp
இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.. ஆனால் மக்களின் தகவல்களை மெட்டாபிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் தனியுரிமை கொள்கையை மீறி மக்களின் தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்பதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்திய போட்டி ஆணையம் அந்நிறுவனங்களுக்கு 213.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வாட்ஸப் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் இந்திய மக்களின் தரவு விற்கப்படுவதோடு, வணிகரீதியாகவும் சுரண்டப்படுகிறது என வாதங்களை முன் வைத்தார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த் மெட்ராஸ் பிளாட்பார்ம், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்தார்.

தரவு பகிர்வு என்கிற பெயரில் இந்திய நாட்டு மக்களின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தரவின் ஒரு வார்த்தையை கூட நீங்கள் பகிர நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டின் அரசியல் அமைப்பு கோட்பாடுகளை நீங்கள் கேலியாக பார்க்கிறீர்கள். நீங்கள் குடிமக்களின் தனி உரிமையை மீற முடியாது. இது தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு ஒரு நாகரீகமான வழி. அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் உறுதிமொழி கொடுக்காவிட்டால் நாங்கள் முக்கிய உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும்.

எங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை உங்களால் பின்பற்ற முடியாது என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். எந்த ஒரு குடிமகனின் தனி உரிமையுடனும் நீங்கள் சமரசம் செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது.. உங்களைப் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் தனியுரிமை விதிமுறைகள் மக்களுக்கு புரியாத வகையில் மிகவும் தந்திரமாக வடிவமைக்கப்படுகிறது. இந்த வழக்கில் வருகிற 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அவர்கள் கூறினார்கள். மேலும் மெட்டா மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களை இது தொடர்பாக பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.