ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (12:17 IST)

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்.. வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு..!

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்.. வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு..!
வாட்ஸ்அப் செயலியின் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "இந்திய மக்களின் தரவுகளில் ஒரு இலக்கை கூட நீங்கள் பகிர அனுமதிக்க முடியாது; தனியுரிமையுடன் விளையாட வேண்டாம்" என்று தலைமை நீதிபதி சூர்யா தலைமையிலான அமர்வு கண்டித்துள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்றும் நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.
 
தகவல் தொழில்நுட்ப அறிவு இல்லாத ஏழை மக்கள் மற்றும் கிராமப்புற வாசிகள் உங்கள் சிக்கலான கொள்கைகளை எப்படி புரிந்துகொள்வார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தனிப்பட்ட தகவல்களைத் திருடும் முறை என்று விமர்சித்தது. 
 
மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மக்களின் தரவுகளை வணிக ரீதியாக சுரண்டுவதை அனுமதிக்க முடியாது என தெள்ளத்தெளிவாக கூறினர். மெட்டா தரப்பில் தகவல்கள் 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்' செய்யப்பட்டவை என்று வாதிடப்பட்டாலும், சிசிஐ விதித்த ரூ. 213 கோடி அபராதத்திற்கு எதிரான வழக்கில் இந்தத் தீவிரம் தொடர்கிறது.
 
Edited by Siva