ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 பிப்ரவரி 2026 (15:30 IST)

தனியார் பள்ளி கட்டண விவகாரம்: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிம்மதி!

தனியார் பள்ளி கட்டண விவகாரம்: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிம்மதி!
டெல்லி தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிம்மதியை அளித்துள்ளது. 
 
புதிய கட்டண நிர்ணய முறையை இந்த நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த போவதில்லை என்று டெல்லி அரசு தெளிவுபடுத்தியதை அடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
 
தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளி நிர்வாகம், அரசு மற்றும் பெற்றோர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா, "அவசரமாக இந்த விதியை அமல்படுத்தியதுதான் எங்களின் கவலையாக இருந்தது; இப்போது அரசு பின்வாங்கியுள்ளதால் இப்போதைக்கு தலையிட தேவையில்லை" என்று குறிப்பிட்டார். 
 
எனினும், இது தொடர்பான சட்டப்பூர்வமான விவாதங்களை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கட்டண உயர்வு குறித்த இறுதி முடிவு உயர் நீதிமன்றத்தின் கைகளிலேயே உள்ளது.
 
Edited by Siva