கரூர் துயர சம்பவம்.. விஜய்யிடம் விசாரணைக்கு பின் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது சிபிஐ..!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 2025-ல் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை கையில் எடுத்த சிபிஐ, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் கூட்ட மேலாண்மை, நிதி நிலவரம் மற்றும் காலதாமதமாக வந்தது குறித்த சுமார் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ தனது விசாரணையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது.
விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் அந்த துயரச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்த பூர்வாங்கத் தரவுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva