ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் கூட்டு சேர பிரதமர் மோடியே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
செயற்கைக்கோள் வழியாக அதிவேக இணையதள சேவை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது,
"ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஸ்டார்லிங்கின் இந்திய வருகையை எதிர்த்தன. ஆனால், எலான் மஸ்க் வாயிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அமைதியை விரும்பிய பிரதமர் மோடி, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது," என்று கூறினார்.
இந்தியா வரியை குறைத்துவிட்டதாக ட்ரம்ப் தினமும் கூறிவரும் நிலையில், இந்தியா அதற்கு ஏன் ஒப்புக்கொண்டது என்பது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை. "எலான் மஸ்க் மகிழ்ச்சியாக இருந்தால், டிரம்பும் மகிழ்ச்சியாக இருப்பார் என பிரதமர் மோடி நம்புகிறார்," என ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
Edited by Siva