வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி: ஆத்திரத்தில் பொதுமக்கள் செய்த அதிர்ச்சி செயல்!

ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி: ஆத்திரத்தில் பொதுமக்கள் செய்த அதிர்ச்சி செயல்
van fire
நேற்று கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட கடைக்கு சொந்தமான வேன் ஒன்றை பொதுமக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கேரளாவில் உள்ள ஒரு ஷவர்மா கடையில் 17 வயது மாணவி தேவானந்தா என்பவர் ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 
 
இது குறித்து நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன்களை கொண்டு ஷவர்மா தயாரித்தது தெரியவந்ததை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டு தயாரித்தவர் மற்றும் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர் 
 
இந்த நிலையில் கேரளா முழுவதும் ஷவர்மா கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி சாப்பிட்ட கடைக்கு சொந்தமான வேன் ஒன்றை மக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது