1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. All shawarma stores closed in kasarkode

ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலி: அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட உத்தரவு

Shawarma
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட அரசு உத்தரவு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கேரளாவில் உள்ள காசர்கோட் என்ற பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தேவநந்தா என்ற ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
இதனை அடுத்து அந்த உணவகத்திற்கு சீலிட்ட காவல்துறையினர் உணவக மேலாளர், ஊழியர் ஆகியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் இதுவரை அந்த உணவகத்தில் சாப்பிட்ட 45 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து காசர்கோட்டில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மளிகை கடையை சூறையாடிய காட்டுயானைகள்