திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (08:43 IST)

பிரேத பரிசோதனை கூடத்தில் திடீரென எழுந்த முதியவர்! – மருத்துவர்கள் அதிர்ச்சி!

Corona
சீனாவில் ஷாங்காய் நகரில் இறந்துவிட்டதாக கருதி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற முதியவர் திடீரென உயிர்பெற்று எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் ஹாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கருதப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்காக அவரை பிணவறை கொண்டு சென்றபோது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளன.

உடனடியாக அவரை மீண்டும் அவசர சிகிச்சையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.