ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
கோடை விடுமுறையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நகரங்களுக்கும் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐகோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஊட்டியை பொருத்தவரை, வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கப்படும். அதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதேபோல், உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த நிபந்தனைகளை அமல்படுத்தி, ஏப்ரல் 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் ஜூலை மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Mahendran