வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 மார்ச் 2025 (17:23 IST)

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

மத்திய பிரதேச மாநிலத்தில் நிறுவப்பட்டு இரண்டே நாட்களில் அம்பேத்கர் சிலை திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரி என்ற கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. ஆனால், மர்ம நபர்கள் அந்த சிலையை இரவோடு இரவாக திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர் கூறியதாவது:
 
"அம்பேத்கர் சிலையை திருடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தீவிர விசாரணை நடந்து வருகிறது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது."
 
இரண்டே நாட்களில் அம்பேத்கர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva