19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று 19 மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவலையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு புதிய பொறுப்பாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 95 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று ஆறாவது கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் இதற்காக விஜய் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தி மாவட்ட பொறுப்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் பின் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தில் ஆறாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Edited by Mahendran