1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Salman gurshith criticized rahul gandi for resigning his post

ராகுல் காந்தி பதவி விலகியது பொறுப்பற்ற தனம் – காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம் !

ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்ததுதான் காங்கிரஸ் இப்போது சந்திக்கும் பிரச்சனை என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் நேரு குடும்பத்தில் இருந்து இல்லாமல் வேறு யாராவதாக இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரது ராஜினாமாவை ஏற்காமல் அவரையேத் தொடர சொன்னபோதும் அவர் மறுத்துவிட்டார். அதனால் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ராகுல்காந்தி பொறுப்பற்ற முறையில் பதவியை ராஜினாமா செய்ததுதான் இப்போது காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அவரின் தனிப்பட்டமுடிவை மதிக்கிறோம். ஆனால், இன்னும் சிறிது காலத்துக்கு அவர் தலைவர் பதவியைத் தொடர்ந்திருக்க வேண்டும். அவர் சென்றதும் வெற்றிடம் உருவாகி இருக்கிறது. அதைப் போக்கவே சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகப் பொறுபேற்றுள்ளார். ’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
போக்குவரத்துத் துறையை தனியார்மயப் படுத்த திட்டமா ? – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !