ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம் - தனுஷ் தந்தை பேட்டி

rajini
sinoj kiyan| Last Updated: திங்கள், 7 அக்டோபர் 2019 (12:51 IST)
ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ்  அதிருப்தியாளர்  கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி  பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் மருமகன்  தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
 
அதில், தமிழகத்திற்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு விமோசன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
kasthuri raja
ஏற்கனவே, பாஜக தலைவர் அமித்ஷாவின் ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்னும் ஹிந்தி   ஹிந்தி மொழித்திட்டத்துக்கு கஸ்தூரி ராஜா  ஆரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :