ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:12 IST)

ராகுல் காந்தியின் திடீர் வெளிநாட்டு பயணம் ஏன்? காங்கிரஸ் விளக்கம்

மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அந்த மாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமல் ராகுல்காந்தி திடீரென வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் ராகுல்காந்தியின் இந்த பயணம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரனவ்ஜா இதுகுறித்து கூறியபோது, ‘பொதுவாழ்வில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், இந்திய ஜனநாயக மரபுபடி, பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு என்றும், ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் பயணம் தனிப்பட்டது என்பது உண்மையென்றாலும், தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அவர் தனிப்பட்ட பயணம் செய்திருக்கலாம் என்றும், கட்சி தற்போது அதளபாதாளத்தில் இருக்கும் நிலையில் ராகுல்காந்தி தனிப்பட்ட சுற்றுப்பயணம் செய்வது சரியா? என்றும் அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.