புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:58 IST)

பயங்கரவாத அமைப்பாக டிஆர்எப் அறிவிப்பு: உள்துறை அமைச்சகம் அதிரடி

home ministry
பயங்கரவாத அமைப்பாக டிஆர்எப் அறிவிப்பு: உள்துறை அமைச்சகம் அதிரடி
டிஆர்எப் என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பின் பினாமி அமைப்பு டிஆர்எப் என்றும் இதனை அடுத்து இந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப் படுவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 
சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத அமைப்பாக இந்த அமைப்பு செயல்பட்டு வருவதை அடுத்து இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது 
 
பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் வழங்கும் செயலில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
மேலும் டிஆர்எப்  அமைப்பின் தலைவர் ஷேக் சஜ்ஜத் குல் என்பவர் உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva