1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:10 IST)

பாகிஸ்தான் பயங்கரவாத மையமாக உள்ளது- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Jaishankar
பயங்கரவாத்தின் மையமாக பாகிஸ்தானை பற்றிய உலகின் பார்வை  உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் ஷபேஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

சமீபத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் இந்தியா பயங்கரவாதத்தை  ஊக்குவிப்பதாக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுகுறித்த செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது அவர் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஹிலாரி கிளிண்டன் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

பாம்பு வைத்திருந்தால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை மட்டும் கடிக்காது, அதை வைத்திருப்பவர்களை கடிக்கும் என்று கூறியதுடன்,  உலகம் பொருளாதார வளர்ச்சி,தொழில் நுட்ப மேம்பாடு, ஆகியவற்றில் வளர்ச்சிக்கு  நீங்கள் முயன்று நல்ல அண்டை நாடாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Edited By Sinoj