1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. harthick pandya met with minister amithsha

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஹர்த்திக் பாண்ட்யா சந்திப்பு

harthick pandya -amithsha
இலங்கைக்கு  அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருபவர் ஹர்த்திக் பாண்டியா.

சமீபத்தில், டி-20 உலகக் கோப்பை, வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியா தோல்வியுற்றதை அடுத்து ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென முன்னாள் வீரர்கள் கூறினர்.

இந்த நிலையில், வரும் ஜனவரி 3 ஆம் தேதி, இலங்கைக்கு எதிராக நடக்கும் முதல் டி-20 போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பு வகிக்கவுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் துணைக் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மார் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பாண்ட்யா சகோதர்கள் சந்தித்துப் பேசினர்.

இதற்கு நன்றி தெரிவித்து, ஹர்த்திக் பாண்டியா டுவீட் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
ரேசன் கார்டு மூலம் இலவச தானிய திட்டம் நீட்டிப்பு- மத்திய அரசு