1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (18:24 IST)

தீபிகா படுகோனுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை: பெரும் பரபரப்பு!

deepika
பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் நடித்த படம் ‘பதான். இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த பாடலில் அவர் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடியதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 
 
மேலும் ’பாய்காட் பதான்’ என்ற ஹேஷ்டேக்  ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் சரி செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran