1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Railway distribute extra coals to Powerplants

மின் உற்பத்தில் நிலையங்களுக்கு கூடுதல் நிலக்கரி! – ரயில்வே சாதனை!

Railway
மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக நிலக்கரி சப்ளை செய்து ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் அனல் மின் நிலையங்களை சார்ந்து உள்ள நிலையில், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ரயில்வே துறை சரக்கு ரயில்கள் மூலமாக கொண்டு சேர்த்து வருகிறது.

மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதற்கு நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கப்பட்டன.

இதனால் தேவையான அளவு நிலக்கரி விநியோகம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மார்ச் வரை வழக்கத்தை விட கூடுதலாக 32 சதவீதம் கூடுதல் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரி போக்குவரத்தில் மொத்தமாக 111 டன் அதிகரித்து 653 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பல்க் தொகை பேரம்.. ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்!