1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:25 IST)

செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் - பிடியை இறுக்கிய தெற்கு ரயில்வே!

ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

 
இது குறித்து தெற்கு ரயில்வே விரிவாக தெரிவித்துள்ளதாவது, ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 
ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால், ரூ.500 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை, ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி சம்பவம் செங்கல்பட்டு அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2021-22 ஆம் ஆண்டு ரயில் தண்டவாளங்களை அத்துமீறி கடந்து சென்றது தொடர்பாக 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.