வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (08:36 IST)

பல்க் தொகை பேரம்.. ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் முயற்சித்து வந்த நிலையில் தற்போது பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது ட்விட்டர். சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக ட்விட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய ட்விட்டர் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் என டீல் பேசியுள்ளார்.

இந்த பேரத்திற்கு ட்விட்டர் நிர்வாக குழு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனால் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.