புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:54 IST)

தாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு !

இந்தியாவில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் தனியார் ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் தனியார் ரயில் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தேஜஸ் விரைவு ரயில் சேவையை அக்டோபர் 4ஆம் தேதி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார். பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட ரயிலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு டெல்லிக்கு மாலை 3.40 மணிக்கு சென்றது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்த 450 பயணிகளுக்கு, தலா ரூ.250 இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.இதன் படி ரூ.1.62 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தனியார்மயத்தை ஆதரிப்பதற்காகவும் தனியார் ரயில் மேல் பயணிகளுக்கு செயற்கையாக மரியாதையை வரவைப்பதற்காகவுமே இந்த இழப்பீடு கொடுக்கப்பட்டு மக்களை ஏமாற்றப்பார்ப்பதாகவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.