1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

எவ்வளவு திட்டினாலும் காங்கிரஸ் வெளியே போக வாய்ப்பு இல்லை.. திமுக கூட்டணி தான் கதி.. அரசியல் விமர்சகர்கள்..

congress
தமிழக அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே சமீபகாலமாக சொல்லடி மோதல்கள் நிலவினாலும், இந்த வலுவான கூட்டணி பிரிய வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 
 
தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற விவகாரங்களில் இரு தரப்பிலும் காரசாரமான விமர்சனங்கள் எழுந்தாலும், கள எதார்த்தம் இரு கட்சிகளையும் இணைத்தே வைத்திருக்கிறது.
 
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'தமிழக வெற்றி கழகத்தை' நம்பி தற்போதைய பாதுகாப்பான கூட்டணியை விட்டு வெளியேற அது விரும்புவதில்லை. 
 
அதேபோல், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கில் இருக்கும் ராகுல் காந்தி, 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமை சிதைவதை விரும்பவில்லை. தென்னிந்தியாவில் திமுக போன்ற ஒரு பலமான மாநில கட்சியின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
 
கடந்த தேர்தல்களை போலவே, இந்த முறையும் சுமார் 25 தொகுதிகளை பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva