செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (19:45 IST)

’மர்ம பார்சல்’ வெடித்து ஒருவர் காயம் ... ரயில் நிலையத்தில் பரபரப்பு.. மக்கள் பீதி !

கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலைத்தில் திடீரென்று ஒரு மர்ம பார்சல் வெடித்தது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஹூப்ளி தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் ஆகும். இங்கு, இன்று, ஒரு பார்சல் பிரிக்காமல்  சந்தேகத்திற்குறிய வகையில் இருந்துள்ளது. 
 
எனவே, அதைப் பரிக்க ஹூசைன் சாப் என்பவர் பிரிக்க முயற்சித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாய் அந்த பார்சல் வெடித்துச் சிதறியது. அப்போது ஹூசைனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த சத்தத்தை கேட்டு, அங்கி விரைந்து வந்த ரயில்வே போலீஸார் ஹூசைனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த பார்சலை வைத்தது என்று போலிஸார் விசாரித்து வருகின்றனர்.