திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (17:53 IST)

மரத்தை வெட்டக்கூடாது; ஆனா ரயில் பாதை போட்டுக்கலாம்! – உச்சநீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்பு

ஆரே காலணியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதிரான தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

மும்பையின் ஆரே காலணி பகுதி மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியாகும். மும்பை மெட்ரோ பணிகளுக்காக அங்குள்ள மரங்களை வெட்டத் தொடங்கியது அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை ஆர்வலர்கள் பலர் போராடியதுடன் உயர் நீதிமன்றத்தில் மனுவும் அளித்தார்கள். ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இயற்கை ஆர்வலர்கள்.

இந்த வழக்கு குறித்து இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் வரை மரங்களை வெட்டக்கூடாது என்றும், ஆனால் மெட்ரோ பணிகளை தொடரலாம் என்றும் கூறியுள்ளது.

அங்குள்ள மரங்களை அகற்றாமல் மெட்ரோ பணிகளை தொடங்க இயலாது. மேலும் மெட்ரோ திட்டமே அந்த வனப்பகுதியின் மேல் அமைவதுதான் மக்கள் அதை எதிர்ப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இரண்டுக்கும் இல்லாத இந்த தீர்ப்பு மக்களை சற்றே குழப்பும்படியாக இருக்கிறது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.