1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottaiyan talk about bjp enter tvk alliance

நாங்க எங்க கால்வச்சாலும் கன்னிவெடி வைக்குறாங்க!. பிஜேபியை திட்டும் செங்கோட்டையன்!...

sengottaiyan
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என பேசியிருந்தார்.அவர் அப்படி அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.. ஆனால் இப்போது வரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை.

எந்த கட்சியெல்லம் தன்னிடம் வரும் என விஜய் எதிர்பார்த்தாரோ அந்த கட்சிகள் எல்லாம் அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணிகளை அமைத்துவிட்டன.. ஏறக்குறைய தமிழக வெற்றிக் கழகம் தற்போது தனித்துவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையிதான் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூட்டணி பற்றி ஒவ்வொரிடமும் பேசி முடித்த உடனே டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள்.. பிரச்சனை எங்களுக்குதானே தெரியும்.. நான் சொல்லாமல் இருக்கும் வரைக்கும் நல்லது என சொல்லியிருக்கிறார்.

அதாவது டிடிவி தினகரனை தவெகவுடன் கூட்டணி அமைக்கும் படி செங்கோட்டையன் பல நாட்களாக கூப்பிட்டு வந்தார்.. ஆனால் டெல்லி உள்ளே புகுந்து அவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுத்து விட்டது.. இதைத்தான் செங்கோட்டையன் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
எங்கேயும் போக முடியாது!. ராமதாஸ் எடுத்த முடிவு!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!...