1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ramadsoss planning to keep alliance with tvk

எங்கேயும் போக முடியாது!. ராமதாஸ் எடுத்த முடிவு!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!...

vijay ramadoss
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே கிட்டத்தட்ட கூட்டணியை முடிவு செய்துவிட்டன. திமுகவும், அதிமுகவும் மெகா கூட்டணி அமைத்திருக்கின்றனர்.. குறிப்பாக அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டது. இந்த கூட்டணியில் அதிமுக, பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருக்கின்றன.
திமுக வழக்கம் போல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனத்தெரிகிறது.

தேமுதிக இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி சேரவில்லை.. குறைந்தது தங்களுக்கு 20 சீட் கொடுக்க வேண்டும்.. மேலும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என பிரேமலதா கேட்டு வருகிறார்.. ஆனால் இதை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே ஏற்கவில்லை என்பதால் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை.

ஒருபக்கம் பாமக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.. அதில் அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.. ஆனால் ராமதாஸ் இதுவரை தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.. இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாமா என ராமதாஸ் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இதற்கான முயற்சியை செங்கோட்டையன் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் அங்கு செல்ல முடியாது.. திமுக போகலாம் என்றால் அதற்கு விடுதலை சிறுத்தை கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது.. எனவே தவெக ஒன்றுதான் வழி.. ராமதாஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ் திமுகவுக்கு சென்றால் எனக்கு மிக வருத்தம் தான்.. டிடிவி தினகரன் பேட்டி